சென்னை மார்ச், 23
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேல் கூறியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது பேசிய தங்கவேல், காங்கிரசுக்கு ஆதரவு தான் கொடுத்துள்ளோம் கூட்டணி குறித்து தலைவர் கமல்தான் முடிவெடுப்பார் அதன்படி செயல்படுவோம் என தெரிவித்தார்.