சென்னை மார்ச், 23
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. பொது பட்ஜெட் 20ம் தேதியும் வேளாண் பட்ஜெட் நேற்றைய முன்தினமும் தாக்கல் செய்யப்பட்டது இன்று தொடங்கும் அவையில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன் பின்னர் நடைபெறும் அவையில், நேரமில்லா நேரத்தில் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடும் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா 2023 என்ற பெயரில் புதிய மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார். கடந்த அக்டோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை பல்வேறு கேள்விகள் அனுப்பி ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார் ஆளுநர் எழுப்பிய கேள்விகள் அதற்கு அரசு அளித்த விபரங்களையும் பேரவையில் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.