சென்னை மார்ச், 21
2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து வேளாண்மை பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வரும் என தெரிகிறது. இரு பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23 முதல் 27ம் தேதி வரை பேரவையில் நடைபெறுகிறது.