அமெரிக்கா மார்ச், 22
உக்ரைன்-ரஷ்யா போரில் உக்கிரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை உக்கிரனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த போர் விவகாரத்தில் எத்தனை காலம் ஆனாலும் உக்கிரைனுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் அறிவித்துள்ளது.