துபாய் மார்ச், 22
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கமும், தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அசோஸியேஷனும் இணைத்து ஏற்பாடு செய்த பள்ளிக்கூட புத்தகங்கள் பரிமாற்ற நிகழ்ச்சி துபாய் கிசஸ் பகுதியில் உள்ள பாண்ட் பார்க்கில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்று முடித்த புத்தகங்களை அடுத்து பயில நினைக்கும் மாணவர்களுக்காக ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உதவிகள் புரிந்துள்ளார்கள். இந்நிகழ்வு அனைத்து குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என அமைப்பின் தலைவி சீலா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் இந்த பயனுள்ள நிகழ்வுக்கு வணக்கம் பாரதம் தமிழ் தேசிய வார நாளிதழ் இணைஆசிரியர் நஜீம் மரிக்கா தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.