துபாய் மார்ச், 21
ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் டான்ஸ் இசை டிரேடிங் சென்டர் மற்றும் டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் டிரேடிங் சென்டர் இணைந்து மகளிர் தினம் 2023 நடத்தியது.
இந்நிகழ்ச்சி டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் நிர்வாகி ஸ்ரீதேவி தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநில PWD அமைச்சர் லட்சுமி நாராயணன் , திரைப்பட நடிகை ரோமா அஸ்ரணி, பின்னணிப் பாடகர் சத்யன் மகாலிங்கம், நடராஜன் lSC பிரசிடெண்ட், மருத்துவர் அடேட் அன்சாரி, வக்கீல் எழில் கரோலின் , தீபா, முனைவர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தொலைக்காட்சி சேவையை பாராட்டி கேப்டன்டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல்லுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காலையிலிருந்து விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, பெண்களுக்கான நடனம் பேட்டி, என்று அத்தனையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி சிவானந்தன், லட்சுமி பாலாஜி ஆகியோர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வணக்கம் பாரதம் தமிழ் வார நாளிதழின் இணைஆசிரியர் நஜீம் மரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
M. நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.