புதுடெல்லி மார்ச், 22
இந்திய விமான நிறுவனங்கள் அதிக அளவில் விமானங்களை கொள்முதல் செய்கின்றன. இந்த வரிசையில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 31,000 விமானிகள் 26,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுமானம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20040ல் இந்தியாவின் விமான போக்குவரத்து 7 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.