கீழக்கரை மார்ச், 23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது.
இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார் பள்ளி இமாம் ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் கிராஅத் ஓதினார், சோஷியல் டெமாக்ரடிக் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாரூக் ராஜா முகம்மது வரவேற்றார்.
மாவட்ட அரசு காஜியும் அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகருமான மௌலானா VVA சலாஹுதீன் ஆலிம் வாழ்த்துரை வழங்கினார். 20ம் ஆண்டு விழாவையொட்டி 500பிளாட் பகுதி மக்களுக்கான இலவச நாற்காலிகள் சேவையை துவக்கி வைத்து பேசிய அறக்கட்டளை நிறுவனர் உமர் பேசும் போது கடந்த 19 ஆண்டுகளாக நமதூர் மக்களுக்கு ஜாதி,மதம் பாராமல் கல்விக்கான உதவி தொகை, ஏழைகளுக்கான மாதாந்திர அரிசி,கொரோனா காலத்தில் இலவச ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற உதவிகளை செய்திருப்பது மன நிறைவை தருவதாக கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியினை கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுத்து வழங்க, லெப்பை தம்பி நன்றி கூறினார்.
தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணை தலைவர் மஹசூக்பானு,வணக்கம் பாரதம் ஊடக அமீரக செய்தியாளர் நஜீம் மரைக்கா,500 பிளாட் பகுதி இளைஞர்கள்,SDPI நகர் தலைவர் செய்யது அபுதாஹிர்,செயலாளர் அப்துல்காதர் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.