கீழக்கரை மார்ச், 23
இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய ஆற்றலுக்காக பெற்றுள்ளார்.
கல்வியாளர்கள்,மருத்துவர்கள், தொழிலதிபர்கள்,சினிமா துறையினர் உள்ளிட்ட பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி ஆவார். இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும் “தற்கொலைகள் தீர்வு அல்ல” என்கிற கட்டுரை உள்ளிட்ட பல்வேறு சமூக சிந்தனை கொண்ட நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் கவிஞர் பஜிலா ஆசாத்துக்கு கீழக்கரை மூர் கிளப் சார்பில் ஹசனுதீன் நகர்மன்ற உறுப்பினர் ஷர்ஃப்ராஸ் நவாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாமும் வணக்கம் பாரதம் இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.