சென்னை மார்ச், 20
பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை மேலும் குஜராத்தை சேர்ந்த மோசடி நபர் கிரேன் பாய் பட்டேல் என்பவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது இது குறித்து கேள்வி எழுப்புவோம் என்றார்.