பாகிஸ்தான் மார்ச், 17
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலை தான் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபுபா முஃப்தி அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானை போல இந்தியாவில் பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.