சென்னை மார்ச், 17
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதை எடுத்து அரசு சார்பில் பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்று நோய் தடுப்பு துறை மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த முகாம் மூலமாக கடந்த ஐந்து நாட்களில் 7,77,145 பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.