சென்னை மார்ச், 17
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்கள் இன்று திறக்கப்படுகிறது. இரண்டில் ஒன்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் உடன் இருப்பார். மைதானம் கட்டும் போது நிதியாக 15 லட்சம் கொடுத்தார் கருணாநிதி. இதனால் நினைவாக ஒரு பெவிலியனுக்கு அவர் பெயர் வைக்கப்படுகிறது.