புதுடெல்லி மார்ச், 17
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் முழு உரிமை அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த தடை சட்டம் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் சட்டமுன் வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்புவோம். அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ரகுபதி உறுதி அளித்துள்ளார்.