மும்பை மார்ச், 17
வந்தே பாரத் ரயில் ஓட்டிய இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். ட்வீட்டில் அவர் சுரேகாவின் புதிய சாதனை புதிய இந்தியாவின் பெண் சக்தியின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவது அம்ரித்துக்காக இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை தருகிறது என்று பாராட்டியுள்ளார். வந்தே பாரத் ரயிலை மும்பைக்கு கொண்டு வந்தமைக்கு மோடிக்கும் நன்றி கூறியுள்ளார்.