புதுச்சேரி மார்ச், 16
வல்லபாய் பட்டேல் சிலையை உதாரணமாக வைத்து தான் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருப்பார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கருணாநிதியின் பேனா பலரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் எழுத்துக்கள் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு. அவருடைய எழுத்துக்களே கருணாநிதி அடையாளமே தவிர பேனா நினைவுச் சின்னம் இல்லை என்று கூறியுள்ளார்.