மத்திய பிரதேசம் மார்ச், 15
மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபாலின் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். வென்றால் டெல்லி, பஞ்சாப் போன்று இங்கும் இலவச மின்சாரம் வழங்குவேன் என்றார்.