சென்னை மார்ச், 14
ஆன்லைன் சூதாட்டம் மசோதா தொடர்பாக விவாதம் கோரி மக்களவையில் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். முன்னதாக இது குறித்து திமுக சார்பில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்கிய முதல் நாளான நேற்று கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா குறித்த விவாதத்திற்கு திமுகவினர் காத்திருக்கின்றனர்.