தேனி பிப், 8
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் தேனி மாவட்ட தலைவர் ஜெய் முருகேஷ் தலைமையில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய சென்னையை சேர்ந்த நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிகோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகிமை ராஜ், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி உமாதேவி, மாவட்டத் துணைச் செயலாளர் செண்பகராஜன் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.