தேனி பிப், 6
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்இந்து முன்னணியின் தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மனுவில் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு தினமும் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர் என்றும், மேலும் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் குளிக்கும் இடங்களிலும் அசுத்தமாக உள்ளது என்றும் அப்பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை அசுத்தமாக உள்ளது என்றும் மீண்டும் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்றும் பக்தர்களுக்கு போதிய சுகாதார வசதியை வழங்க வேண்டும் என்று கூறிய கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவின் போது இந்து முன்னணியின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.