தேனி பிப், 11
தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முரளிதரன் இந்து சமய அறநிலையதுறைக்கு மாற்றப்பட்டர். இதனால் புதியதாக தேனி மாவட்ட ஆட்சியராக சஜீவனா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆட்சியரை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊராட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் ஃப்ரீதா நடேசன் தலைமையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பூங்கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மாவட்ட கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.