திருவாரூர் பிப், 6
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் கோவிலின் ஆழி தேரோட்டம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆழி தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.