திருவாரூர் ஏப்ரல், 1
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.