தென்காசி பிப், 2
சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார். தாசில்தார் செல்வக்குமார் வரவேற்று பேசினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் மனுநீதி நாள் முகாமில் மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர்கள் ஷீலா, சுதா, ராஜ மனோகரன், கந்தசாமி, சங்கர நாராயணன், சுப்புலட்சுமி, துணை ஆட்சியர்கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஆத்துவழி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், துணை தாசில்தார்கள் திருமலைச்செல்வி, சரவணன், சிவப்பிரகாசம், கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் வள்ளியம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி நன்றி கூறினார்