தென்காசி ஜூன், 10
தமிழகத்தில் காலை 11 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி விருதுநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிரமத்தை தவிர்க்க இம்மாட்டங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் சற்று முன்னதாகவே புறப்பட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.