திருச்சி பிப், 2
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன்.இவர் தனது வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை நடத்தியதில் வீட்டிலிருந்து 194 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.