திருச்சி டிச, 31
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், மருத்துவ உபகரண கருவிகள் வழங்குதல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஒரு கோடியே 1-வது பயனாளியான சன்னாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு மருந்து பெட்டகத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.