திருச்சி டிச, 30
திருச்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் அவர், அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடரிருந்து பேசிய அமைச்சர் உதயநிதி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். திராவிட மாடல் எனும் அட்சய பாத்திரம் கொண்டு மக்களின் முன்னேற்றத் திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக புகழாரம் சூட்டினார்.