சிவகங்கை ஆகஸ்ட், 12
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, தனிக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாநில பொருளாளர் உறங்காபுலி, முகவை மலைச்சாமி, மதுரை மாவட்ட செயலாளர் சிவக்குமார், விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ராஜீவ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.