சிவகங்கை ஆகஸ்ட், 13
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுமையும் பாதயாத்திரை நடத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9 ம் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பாதயாத்திரை 4 ம் நாள் சிவகங்கையில் இருந்து மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட பொருளாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.