சிவகங்கை ஆகஸ்ட் 11
75-வது இந்திய சுதந்திரதினத்தை பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அருகே இலுப்பைகுடியில் அமைந்துள்ள இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
இதில் இலுப்பக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, திருமாஞ்சோலை, அரசனூர், இலுப்பக்குடி அரசு பள்ளிகள் மற்றும் பாண்டியன் சரஸ்வதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆக்சல் சா்மா முன்னிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், எவ்வாறு ஆயுதங்களை கையாள்வது, இது மாதிரியான ஆயுதங்கள் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகள் கூறினர்.