இந்தூர் ஜன, 24
நியூசிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று இந்திய தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று களம் காண்கிறது. ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகள் உடன் நியூசிலாந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதே புள்ளிக்கு இந்தியாவும் முன்னேறி உள்ளதால் இன்றும் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வெல்லுமா என்பது ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.