ஒடிசா ஜன, 17
16 அணிகள் இடையேயான பதினைந்தாவது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியும் மோதியது. இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று தென்கொரியா-ஜப்பான் மாலை 5:00 மணிக்கும், ஜெர்மனி-பெல்ஜியம் இரவு 7:00 மணிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன.