திருவனந்தபுரம் ஜன, 16
திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியின் காலில் விழுந்தார். பிறகு அந்த ரசிகரின் செல்போனை வாங்கி சூரியகுமார் போட்டோ எடுக்க விராட் கோலியுடன் அவர் போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.