புதுடெல்லி ஜன, 15
சமீபத்தில் நடந்த சாலை விபத்தால் ஐபிஎல் தொடரை தவறவிட்ட ரிஷப் பண்ட் இந்த ஆண்டு பெரும்பாலான ஆட்டத்தையும் இழக்க நேரிடும் என தெரிகிறது. முழங்காலில் ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆறு வாரங்களுக்கு பிறகு மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. பண்ட் சுமார் ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதனால் அக்டோபரில் தொடங்கும் உலகக் கோப்பைக்கு தேர்வாகும் வாய்ப்பு குறைந்துள்ளது.