தென்னாப்பிரிக்கா ஜன, 14
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் சவால் கொடுக்க வாய்ப்புள்ளது. போட்டி இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது.