காஞ்சிபுரம் ஜன, 12
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை பொதுமக்கள் யாரும் தீவைத்து எரிக்காமல் இருக்கவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் அளித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.