காஞ்சிபுரம் ஜன, 9
காட்டாங்கொளத்தூர் முன்னாள் திமுக. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் லோகநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்