காஞ்சிபுரம் ஜன, 17
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள 72 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம் வருகிற 19 ம்தேதி மற்றும் பிப்ரவரி 9 ம்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்.
இந்த சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 72 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்க உள்ளதால் அந்தந்த கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அனைத்து துறை திட்டங்களின் பயன்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.