புதுடெல்லி ஜன, 7
இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் இருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமானதாகும். கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருந்தது இதனை சரி செய்து இந்திய அணி கோப்பையை தட்டி தூக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.