புனே ஜன, 5
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும். அதே நேரத்தில் இலங்கை அணியும் டஃப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.