புனே ஜன, 3
மகாராஷ்டிரா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி பூனையில் நேற்று தொடங்கியது ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் 15 வயதான மனாஸ் தாமே 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மைக்கேல்மோவிடம் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகலும் முதல் சுற்றை தாண்டவில்லை. இவர் செர்பியா நாட்டு வீரர் பிலிப் கிரிஜினோவிச்சிடம் வீழ்ந்தார்.