ராஜ்கோட் ஜன, 8
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூரிய குமாரின் சதத்தால் 229 ரன்கள் குவித்தது பின்னர் களம் இறங்கிய இலங்கை ஆரம்ப முதல் தடுமாற்றத்துடன் விளையாடியது. இந்நிலையில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இந்தியா 2-1 என தொடரை வந்துள்ளது.