தேனி ஜன, 1
தேனிமாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டும், தேனி ஒன்றியத்திற்குட்பட்டுமுள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோல் ஆங்கில புது வருடத்தினை முன்னிட்டு கௌமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
இந்த சிறப்பு பூஜைகளில் பெண்கள் விளக்கேற்றியும் நீண்ட தொலைவில் வரிசையில் நின்றும் கௌமாரியம்மன் தரிசித்து அருள் பெற்று சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுபாடுகள் செய்யப்பட்டிருந்தன