தேனி ஜன, 5
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 1.1.2023 தேதியினை தகுதி நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார் .
மேலும் இந்த வாக்காளர் பட்டியலில் ஆண்டிபட்டி தொகுதியில் 2,73,385 வாக்காளர்களும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 2,84,509 வாக்காளர்களும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 2,74,723 வாக்காளர்களும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 2,82,939 வாக்காளர்களும் உள்ளனர்.
இதில் தேனி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,46,686 வாக்காளர்களும், 5,68,675 பெண் வாக்காளர்களும், 195 இதர வாக்காளர்களும், தேனி மாவட்டத்தில் மொத்தம் 11,15,556 வாக்காளர்கள் அடங்கிய தொகுப்பினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்பாக துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி வெளியிட்டார்