புதுடெல்லி டிச, 27
ரஞ்சிகோப்பை போட்டியில் தமிழ்நாடு டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. டெல்லியில் இன்று தொடங்கும் ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி டெல்லியை எதிர்கொள்கிறது. தமிழக அணியில் ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா அபராஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் களமிறங்குகின்றனர். தமிழக அணி வெற்றி பெறும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டி நடைபெற உள்ளது.