பிரேசில் டிச, 30
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே ( 82 )காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே மூன்று முறை உலகக்கோப்பை வென்றார். 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.