தேனி டிச, 24
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் வேணுப்பிரியா பாலமுருகன் தலைமையிலும் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த கூட்டத்தின் போது 74 கூட்ட பொருள் விவதித்து அதனைத் தொடர்ந்து 74 கூட்டப் பொருளின் விவாதங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் ,தெரு விளக்கு ,சிறுபாலம் அமைத்தால் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் படிப்படியாக அனைத்து வசதிகளும் தேனி நகராட்சிக்குப் பட்ட பகுதிகளில் செய்து தரப்படும் என்று கூறினார். மேலும் இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.