தேனி டிச, 25
தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து தேனி நகருக்கு வருகை புரிந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரேற்பு நிகழ்வில் தேனி நகரத் தலைவர் கோபிநாத் , மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சின்ன பான்டி ,பெருமாள் , பிரபு மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.