தேனி டிச, 23
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்ணகி கோவிலை மீட்டெடுக்கவும், தமிழக நிலங்களை அபகரிக்க துடிக்கும் கேரளா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பிரேம் சந்தர் பேச்சாளர் சிவா சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன் பங்கேற்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.